Monday, October 13, 2008

விழியீர்ப்பு


விழியீர்ப்பு


நீ
பார்த்து விடக் கூடாதென
நானும்.


நான்
கண்டு விடக் கூடாதென
நீயும்.


பயமாறிப்
பரிமாறிக் கொண்டோம்
பார்வைகளை.

மையமாய்
நம் விழிகள்
சந்தித்தன
ஒரு புள்ளியில்.

விளைந்த
விழியீர்ப்பு விசையை
அளக்கக் கருவியுமுண்டோ? !.

2 comments:

  1. விழியீர்ப்பு விசை.....புது வார்த்தை...அழகான கவிதை...
    அன்புடன் அருணா

    ReplyDelete
  2. //விழியீர்ப்பு விசை.....புது வார்த்தை...அழகான கவிதை...
    அன்புடன் அருணா//

    அருணா
    வருகை தந்தது
    உவகை.
    நன்றி.

    ReplyDelete