நரை
நரைமுதுமை
முகவரியின்
முதல் வரி.
அந்தி(ம)க் கதிரின்
ஆரம்ப
நிறப்பிரிகை.
ஒழுகும் ஆயுளை
உணர்த்தும்
ஒளிக் கீற்று.
தழும்பும் இளமை
தடம் மாறாமல்
தடுக்கும் சமிக்ஞை.
தடுமாறிய தருணங்களை
மீள்பார்த்துச்
சரிபார்க்கச் சொல்லும்
மனக்கணக்கு.
காலன் பதிவேட்டில்
புதுக்கணக்குக்கான
ஆதிச் சுழி.
கலக்கலாக பொருளுடன் இருக்கிறது 'நரை' கவிதை.
ReplyDelete//கோவி.கண்ணன் said...
ReplyDeleteகலக்கலாக பொருளுடன் இருக்கிறது 'நரை' கவிதை.
//
அட வாங்க வாங்க.
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி
பட்டம் பெற்றது போல இருக்கிறது.
வருகை தந்தது உவகை.
தொடர்ந்து வாருங்கள்.
நிதர்சனமான கவிதை...
ReplyDelete//அந்தி(ம)க் கதிரின்
ஆரம்ப
நிறப்பிரிகை.//
மிகவும் ரசித்த வரிகள்...