(கவிஞர் யுகபாரதியின் கவிதை ஒலிவடிவிலும்)
இனி நான் எதற்காகவும்
காத்திருக்கத் தேவையில்லை
கிடைத்துவிட்டாள்
இதுவரை சேமித்த கனவுகளை
அவளுக்காகச் செலவழிப்பேன்
அவளுக்கு அவள் விரும்பும்
செல்லப் பெயரைச் சூட்டுவேன்
கோபத்தில் இருப்பதுபோல்
பாவனை செய்து அவள்
கொஞ்சுவதை வியப்பேன்
குறுஞ் சிரிப்பில் மேலும்மேலும்
அவள் அழகுகளைக் கெளரவிப்பேன்
யார் யாரெல்லாம்
என்னைக் கவர்ந்தார்களோ
அத்தனை பேரையும்
அவளிடமிருந்து பெறுவேன்
என் காதல் நாட்களை நானும்
ரசிக்கத் தொடங்குவேன்
அவளுக்கு என் மீது பிரியம்
மிகுந்திருப்பதால்
அவளுக்குப் பிரியமில்லா விஷயங்களைத்
தவிர்ப்பேன்
முழுமையாக என்னை
ஒப்படைக்கத் தொடங்கிவிட்டேன்
இதன் மூலம் நான்
சொல்ல விரும்புவது
எனக்கு எழுதிய காதல் கடிதங்களை
நீங்களே அன்புகூர்ந்து
கிழித்துவிடுங்கள்... அல்லது
வேறு யாருக்காவது
கொடுத்து விடுங்கள்.
ஆக்கம் - கவிஞர் யுகபாரதி.
இந்தக் கவிதையின் ஒலிவடிவம்
அழகான பகிர்வு ஸதக்கத்துல்லாஹ்
ReplyDelete