Sunday, January 15, 2012

தொன்மத் "தொழில்".



• குண்டூசி கூடக்
கூவிக் கூவி
விற்கப்படும்
இந்தக் காலத்திலும்

ஆர்ப்பாட்டமின்றி
அமைதியாகவே
தொடர்கிறது
உலகின்
ஆதித் "தொழில்".

• பெரு வணிகத்தின்
ஒப்பனையில்
மயங்கித் திளைக்கிறது
உலகம்.

• திகைத்துத்
தவிக்கிறது
அலங்காரமற்ற
அழகான
சிறு, குறு
வர்த்தக உலகம்.

• வணிகமாகி விட்ட
யுகத்தில்
கூவிக் கூவியே
மடமை வலைக்குள்
ஈர்க்கப்படுகிறது
மனுக் குலம்.

• அத்தனை
கூச்சலுக்கு
இடையிலும்
சலனமற்று
சப்தமின்றி
அமைதியாய்
நடக்கிறது
தொன்மத் "தொழில்".

Thursday, January 5, 2012

இறைவா!!

Iraiva! by haisathaq

இறைவா!

படைப்புகளில் எல்லாம்
சிறந்த படைப்பு
மனிதப் படைப்பு
என்றவன் நீ!.

அந்தப் படைப்புகளைப்
படைத்த நீயோ
சிறந்தவனுக்கெல்லாம்
சிறந்தவன்!!.

மனிதனின்
இதயத் துடிப்புகள்
நின்றால்
அவன் பிணம்.

ஆனால்

அதற்கும்
உயிர் கொடுத்து
எழுப்புகிறாயே
அதில் தான்
வெளிப்படுகிறது
உன் கருணை
என்னும் குணம்.

பெற்ற தாயோ
குழந்தை அழுதால் தான்
உற்று நோக்குவாள்.

ஆனால்

நாங்கள் உள்ளத்தளவு
மனம் நொந்தாலே
உற்று நோக்கக் கூடியவன்
நீ!.

ஆம்!!

நீ
பெற்ற தாயை விட
மேலான
அன்பு செலுத்தக் கூடியவன்.

இறைவா!

உதிக்கின்ற சூரியனும்
உன்னிடம்
அனுமதி கேட்டுத்தான்
உதிக்குமாமே!.

வானம் கூட
உன் அனுமதி கேட்டுத் தான்
மழை பொழியுமாமே!!

வேடிக்கையைப்
பார்த்தாயா!!!

இவை அனைத்தையும்
அனுபவிக்கக்கூடிய
மனிதன் மட்டும்
உன் அனுமதியை
நிராகரித்துத்
தான்தோன்றித் தனமாக
நடக்கிறான் இப்பூமியில்.

சூரியன் கூட
அதற்குரிய நேரத்தில்
விழித்தெழுகிறது.

ஆனால்
மனிதனோ

உன்னை வணங்குவதில்
தாமதமாகவே
விழித்தெழுகிறான்.

உன்னை வணங்கும்
விஷயத்தில்
என்றைக்கு
மனிதன் விழிப்பானோ

அன்றைக்குத் தான்
அவன் வாழ்வில்
விடியல் பிறக்கும்!!!.

ஆக்கம் : சகோதரர் S.H.அப்துல் காதர்.