Friday, October 21, 2011

தனிமைக் கண(ன)ம்



அருகில்
இருந்த பொழுதுகளைக் காட்டிலும்
விலகி இருக்கும்
தருணங்களில்
அதிகம் நினைக்கப்படுகிறாய்
நீ.

கடந்து செல்லும்
நங்கையரின் நயனங்களில்
உன் தனித்துவம்
தேடித் தேடித்
தோற்றுப் போகிறேன்
நான்.

தனிமையின்
வெறுமையால்...
கடக்கும்
ஒவ்வொரு கணமும்
கனத்துப் போயிருக்கிறது
மனம்.

காற்று வெளியில்
மிதக்கும் குரல்களில்
உன் மகரந்தச்
சொற்களைத் தேடியலைகின்றன
என்
செவிப் பட்டாம்பூச்சிகள்.

வறண்ட தொண்டையை
நனைக்க வரும்
தண்ணீரின் தண்மைக்காகத்
தாகித்திருக்கிறது
என் நாவு.

தாமதிக்கும் கணங்கள்
அத்தனையும் நோவு.

விலகி இருப்பது
விவாதத்துக்கு நல்லது.
விவாகத்துக்கு அல்ல.

விரைந்து
வா தேவி!

தவறினால்…

தவிப்பில்
கரைந்து போகும்
என் ஆவி!!!


4 comments:

  1. நெஞ்சை தொட்ட வரிகள்

    ஏனோ மனதில் கணம் கொண்டது

    அருமை

    ReplyDelete
  2. நீங்க பாலோவர்ஸ் கெட்ஜெட் வைக்கலையா? :-(

    ReplyDelete
  3. உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

    வாழ்த்துக்கள்

    ReplyDelete