
விழிமின்! எழுமின்!!
குண்டு, குழியில்லாச்
சாலைகள்।
குப்பைக் கூளமில்லா
வீதிகள்.
கொசுக்களில்லாச்
சேரிகள்.
கூவமில்லாத
சென்னை.
சுவர் கண்ட
இடமெல்லாம்
"நீர்" பாய்ச்சா
இளசுகள்.
எச்சரிக்கையோடு
எச்சில் உமிழும்
பெரிசுகள்.
விதிகளை மதிக்கும்
மக்கள்.
நேரந்தவாறா
மாநகரப் பேருந்து.
காலந்தவறாத
மின் தொடர் வண்டி.
கடமை தவறாத
காவலர்கள்.
கண்ணியம் காக்கும்
காதலர்கள்.
ஆழிப் பேரலை
அச்சமில்லா
மெரீனா.
நன்கொடையில்லாக்
கல்லூரிச் சீட்டு.
சேலை அணிந்து வரும்
கல்லூரிச் சிட்டு.
வாரிசுகளை ஓரங்கட்டும்
அரசியல்வாதி.
தகுதி பார்த்து
வாக்களிக்கும்
திருமான் பொதுஜனம்!
செய்மதி ஊடகத்தில்
செந்தமிழ் உரையாடல்!
சுந்தரத் தமிழில்
சுதந்திர வாழ்த்து!
இப்படிப் பட்டியலிட
இன்னும் பல
நல்ல விடயங்கள்!
விழிக்கும் தருணம் வரை
அழகாய்த் தான்
இருந்தது
என் பாரதம்।

No comments:
Post a Comment