
நாய்ப்பாசம்.
பரபரப்பான நெடுஞ்சாலை.
எதையோ எதையோ
தேடும் முனைப்பில்
காத்து நிற்கும்
வாகனங்கள்।
பச்சை
ஒளிரும் வேளை
பாய்ந்து வந்தது
வீதியோர ராஜா।
மருண்ட அதன் விழிகளில்
வாகனங்களின்
எதிரொலி।
சடுதியில் சாலை புகுந்து
நெஞ்சோடு சேர்த்தணைத்தான்
ராஜாவை
வீதியோரச் சின்னமணி।
வசையின் இசையோடு
நடுச்சாலையில்
அரங்கேறியது
உயிர்களிடத்தில்
அன்பு செய்.

//வசையின் இசையோடு
ReplyDeleteநடுச்சாலையில்
அரங்கேறியது
உயிர்களிடத்தில்
அன்பு செய்.//
நச் வரிகள்...அருமை...