•நாயகனை
ஓரக் கண்ணால்
பார்ப்பதே பேரழகு
தாத்தா காலத்தில்....
•நாயகனும் நாயகியும்
தொட்டுத் தொட்டுப்
பேசுவதே பேராச்சர்யம்
அப்பா காலத்தில்...
•தளுக்குறதுக்கும்
குலுக்குறதுக்கும்
தனித் தனி நாயகி
இது தமையன் காலம்....
•படம் முழுக்கப்
அந்தப் பொறுப்பையே
நாயகி
பாந்தமாச் செய்யுறா
என் காலத்தில்...
•படங்கள் யாவும்
நீளம் என்பது
திரிந்து
எல்லாமே
“நீலமாகி விடுமோ?”
வருங்காலத்தில்.... :(
Good Poem
ReplyDeleteRiyas வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDelete