இணையில்லா இறைவா!
இணையில்லா
இறைவா!
அன்புக்கு
நீயே ஆதாரம்.
அசதியின்
அவசரத்தில்
அதை மறந்தால்
வாழ்வே சேதாரம்.
கருணைக்கு
நீயே மூலாதாரம்.
அந்த
நம்பிக்கையே
இகபர வாழ்வின்
ஜீவாதாரம்.
மண்ணில்
மன்பதைகளை
மாண்புறக் காப்பவனே!
இமைப் பொழுதும்
எனை
என் பொறுப்பில்
சாட்டி விடாதே!
கார்மேகக்
கருணையாளனே!
அசத்தியம் முறித்து
சத்தியம் வெல்ல
நீயே
கணை.
உன்
கனி விழிப்
பார்வையின்
கண்ணியில்
என்னையும்
பிணை.
உன் வழி
வாழும்
நல்லடியார் குழுவில்
என்னையும்
இணை.
இகமதில்
அகமதில்
முஹம்மதின்
துணையோடு
கதிபெற
இப்போதும்
முப்போதும்
எப்போதும்
நீயே
துணை.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇகமதில் அகமதில் முஹம்மதின் துணையோடு கதி பெற இப்போதும் முப்போதும் எப்போதும் நீயே துணை.
ReplyDeleteஇந்த வரிகளில் மின்னும் ஆன்மீக ரகசியம் ஆழமானது.அர்த்தமுள்ளது.
ஏகத்துவமும் தூதுத்துவமும் விளக்கும் எழுத்துப் புதையல்
அருமை சதக்.