Saturday, December 31, 2011

“முத்து மழை”



* அபூர்வமாய்
வாய்த்தது
அடைமழைத்
தருணம்.

* நெஞ்சிலும் ஓயாத
சத்த மழை.

* விரித்த குடையோடு
வீதியில் வருகிறாய்....:)

* சடுதியில்
சர்வ நாடியும்
ஒடுங்கிப் போயின
சாதுவாய்....!

* மழையை ரசிப்பதா?

* உன்னை ரசிப்பதா?

* மாறி மாறி
யோசிக்கும் என்னையே
பரிகசிப்பதா?

* வியப்பில்
வியர்த்த வேளை

* குறும்பாய்த்
தலை சாய்த்துக்
கூடவே
குடை சாய்த்தாய்…..!

* பட்டுத் தெறித்த
மழைத் திவலைகளில்
ஒரு துளி
இறங்கியது
என்
நெற்றியில்….

* சிப்பிக்குள் விழுந்த
மழைத்துளியாய்ச்
சிலிர்த்துப் போனது
மனசு.

* இப்போது
முத்து மழை.
.
.
.
.
.
.

* இனி எப்போது
முத்த மழை?!...:)

4 comments:

  1. வரிகள் நன்றாக உள்ளது. வாழ்த்துகள். புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  2. அடி மழை இடியோடு விழுந்தால் முத்த மழை மாறி பெரும் சத்த மழையாகிவிடும்...ஹி ஹி ...
    நல்லதோர் கவிதை மழையில் எமை நனைந்திடச் செய்ததற்காய் நன்றிகள் பல.

    நட்புடன்
    அபுஸாயிமா

    ReplyDelete
  3. kavithai (kovaikkavi)...
    வரிகள் நன்றாக உள்ளது. வாழ்த்துகள். புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    //
    வருகை + ஊக்கத்துக்கு நன்றி.

    ReplyDelete
  4. அடி மழை இடியோடு விழுந்தால் முத்த மழை மாறி பெரும் சத்த மழையாகிவிடும்...ஹி ஹி ...
    நல்லதோர் கவிதை மழையில் எமை நனைந்திடச் செய்ததற்காய் நன்றிகள் பல.

    நட்புடன்
    அபுஸாயிமா
    //
    வாஞ்சையான கருத்துக்கு வற்றாத அன்பின் பதில் மொழி நன்றி... :)

    ReplyDelete