Monday, April 12, 2010

'கலை' வீடு



வட்டமாய்க் கொஞ்சம்.

சதுரமாய் இன்னுஞ் சில.

நீள் வட்டத்திலும் கூட.

வடிவங்கள் எத்தனையோ
அத்தனையும் உண்டு
அவனிடம்.

விளையாட அழைத்தான்
வேகமாய் வந்து.

கட்டி முடித்தேன்
எனக்கே எனக்கான
வீட்டைப் போலக்
வெகு பிரயத்தனத்துடன்.

சிரித்துக் கொண்டே
எட்டி உதைத்தான்
திரும்பி வந்து பார்த்தவன்.

கட்டிய வீட்டை விட
அழகாய் இருந்தது
அவன்
கலை(ந்)த்த வீடு.

6 comments:

  1. தங்களின்
    கவிதை நன்றாக உள்ளது.

    ReplyDelete
  2. //தங்களின்
    கவிதை நன்றாக உள்ளது.
    //

    நன்றி ஷாஹுல்.
    உங்களின் வருகை
    தந்தது உவகை.

    ReplyDelete
  3. கவிதை அருமை.. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. //கவிதை அருமை//

    என் இணைய மனையில்
    உலவியதன் வழி
    இதய மனையிலும்
    அமர்ந்து விட்டீர்.
    தொடருங்கள்
    உங்கள் ஆதரவை.

    ReplyDelete
  5. //கவிதை அருமை.. வாழ்த்துக்கள்...//

    அஹ்மது இர்ஷாத்
    தங்கள் வருகையே பேருவகை.நன்றி.

    ReplyDelete